உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும் எனக்கிந்த அன்னை பூமி போதும் இங்குப் பிறந்தவரும் எங்கேப் போகிறான் எனக்கெந்தன் சொந்த நாடு போதும் எனக்கெந்தன் சொந்த நாடு போதும் வகை வகையாய் வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கையில்லையா... வழி வழியாய் காத்ததெல்லாம் நமது செல்வம்மில்லையா... மாற்றந்தான் நல்லம்மாற்றமா அது நமக்கு வேணுமா உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும் எனக்கிந்த அன்னை பூமி போதும் ♪ நதிகளினால் நிலம் செழித்துக்கொழிப்பதில் நெஞ்சம் நெகிழ்கிறேன் விதிவசத்தால் நான் சோத்துக்கலைந்ததை நினைத்துப்பார்க்கிறேன் பட்டினியும் பாமரரும் பாரதத்தின் செல்வம்மென்பேன் நாடுவிட்டு செல்வதெல்லாம் இழிந்து நிற்கம் ஏழை என்பேன் அன்னியரின் செல்வமெல்லாம் அன்னைமண்ணுக்கொரு விலையாமோ இந்த மண்ணைவிட்டு விட்டு எங்கு போவது உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும் எனக்கிந்த அன்னை பூமி போதும் எதுவும் இங்கே மாறிப்போகுது என்னை எந்த மாற்றம் என்ன செய்யும் என்னை எந்த மாற்றம் என்ன செய்யும் ♪ தாயவள் பாசமும் தந்தையின் நேசமும் இலைக்கு கிடைக்குமா உறவினர் சொந்தமும் உருகிடும் பந்தமும் வெளியில் கிடைக்குமா வள்ளுவனும் பாரதியும் வணங்கியது இருள் அல்லவா வைகை கரை ஓரத்திலே வளர்ந்த தமிழ் நமதல்லவா வார்தைக்குள்ளே அடங்கிடுமா முன்னோர்த்தம் பெருமையெல்லாம் நினைக்கையிலே நெஞ்சமெல்லாம் நிரம்பி வழியுதே உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும் எனக்கிந்த அன்னை பூமி போதும் இங்குப் பிறந்தவரும் எங்கேப் போகிறான் எனக்கெந்தன் சொந்த நாடு போதும் எனக்கெந்தன் சொந்த நாடு போதும் வகை வகையாய் வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கையில்லையா... வழி வழியாய் காத்ததெல்லாம் நமது செல்வம்மில்லையா... மாற்றந்தான் நல்லம்மாற்றமா அது நமக்கு வேணுமா உலகம் இப்போ எங்கோ போகுது எனக்கிந்த அன்னை பூமி போதும் எனக்கிந்த அன்னை பூமி போதும்