பீட்ரு, தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்னை வறுத்த குழி தருமான்டா இத நான் சொல்லலடா நம்ம திருவள்ளுவர் நைனா சொன்னாருடா நைனா சொன்னாருடா ♪ வள்ளுவர் குப்பம் தான்டா நாம வாழுகிற பூமிதான்டா மீனாட்சி அக்கா தான்டா நம்ம வாழ வச்ச சாமிதான்டா மேளம் உண்டு மத்தளம் உண்டு தாளம் தட்டுங்கடா வானம்விட்டு வேட்டு வச்சு வெளுத்து கட்டுங்கடா வெற்றி வெற்றி விழாதானடா நல்ல நல்ல திருநாளடா, டோய் வள்ளுவர் குப்பம் தான்டா நாம வாழுகிற பூமிதான்டா மீனாட்சி அக்கா தான்டா நம்ம வாழ வச்ச சாமிதான்டா ♪ சுட்டாலும் வெண்சங்கு வெண்சங்குதான் பட்டாலும் செவ்வாழை செவ்வாழைதான் கெட்டாலும் நம் மக்கள் நம் மக்கள் தான் கொண்டாடும் என்னாளும் ஊர் மக்கள் தான் நல்லவருக்கு சோதனே, நாளும் நூறு வேதன ஆனபோது அவுங்கதான், ஆற்றுவாங்க சாதன நல்லா நெஞ்சம் நேரில் இருக்கு நன்றி சொல்வோம் நாமும் அதற்கு வள்ளுவர் குப்பம் தான்டா நாம வாழுகிற பூமிதான்டா மீனாட்சி அக்கா தான்டி நம்ம வாழ வச்ச சாமிதான்டி ♪ உழைக்காம முன்னேர முடியாதப்பா உக்காந்து தின்னாக்கா விடியாதப்பா அன்றாடம் ஒழுங்கா பாடுபடு அப்புறம் புரட்சியில் ஈடுபடு மாடி வீடு சிரிக்கலாம் மண்ணு வீட்ட பழிக்கலாம் ஏழைக் கூட்டம் துணிஞ்சிட்டா ஏங்கும் கூட்டம் திருத்தலாம் இப்போ அந்த நேரம் நமக்கு ஆ வந்துருச்சு அச்சம் எதுக்கு? வள்ளுவர் குப்பம் தான்டோய் நாம வாழுகிற பூமிதான்டா ஹாஹ மீனாட்சி அக்கா தான்டி நம்ம வாழ வச்ச சாமிதான்டி மேளம் உண்டு மத்தளம் உண்டு தாளம் தட்டுங்கடா வானம்விட்டு வேட்டு வச்சு வெளுத்து கட்டுங்கடி வெற்றி வெற்றி விழாதானடா நல்ல நல்ல திருநாளடா, அடடடட வள்ளுவர் குப்பம் தான்டா நாம வாழுகிற பூமிதான்டா ஹாஹ மீனாட்சி அக்கா தான்டி நம்ம வாழ வச்ச சாமிதான்டி