ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும் ஆ: இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெ: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான். அவன் வந்தான் மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான். அவன் தந்தான் ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள் கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள். ஓர் காதல் பூத்ததோ பெ: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ ஆ: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ பெ: ஒரு ராகம். ஒரு தாளம். இணைகூடும்போது கானம்தான் பெ: ராஜனோடு ராணி வந்து சேரும் ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம் ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை. பூம்பாவை என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை. பேராசை பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம். சின்னப் பெண்ணின் விண்ணப்பம் சந்திக்கின்ற சந்தர்ப்பம். சின்னப் பெண்ணின் விண்ணப்பம். நீ கேட்க வேண்டுமோ ஆ: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற பெ: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர ஆ: என்ன வேகம். என்ன தாகம். ஒரு காவல் தாண்டக் கூடுமோ ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெ: இது மன்மத சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம் ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்