எல்லோர்க்கும் நிழலான தாயே பொல்லாத பழி உந்தன் மீதோ குலமாதரை குறை சொல்வதோ இது தான் முறையோ இறைவா மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ஒரு பிள்ளை அங்கே சிறைச்சாலை தன்னில் ஒரு பாவம் அறியா தாய் இந்த மண்ணில் மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ♪ பசும் பாலைக் கள் என்று கூறும் இந்த உலகம் கழி நீரை கங்கை என நாம் குடிக்கக் கொடுக்கும் தாய்க்குலத்தை மேடை இட்டு தெய்வம் என்று போற்றும் பேசியதைக் காற்றில் விட்டு வேசி என்று தூற்றும் தாயின் மரணம் பிள்ளை அறிந்தும் தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும் அன்னைக்கொரு கொள்ளி இட பிள்ளை வருமோ மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா ♪ ஈன்றெடுத்த தாயும் அல்ல எங்களுக்கு நீயே இடம் கொடுத்து உணவளித்து உடல் வளர்த்த தாயே நீ கொடுத்த தோள் கொடுத்து உனைச் சுமக்கும் கடமை நேர்ந்ததென்ன எங்களுக்கு நாங்கள் செய்த கொடுமை உன் வயிற்றிலா நாங்கள் பிறந்தோம் கொள்ளி இடவா நாங்கள் வளர்ந்தோம் தாங்கவில்லை போதும் இந்தக் கொடுமையம்மா மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா ஒரு பிள்ளை அங்கே சிறைச்சாலை தன்னில் ஒரு பாவம் அறியா தாய் இந்த மண்ணில் மண் வீட்டில் இருந்தாலும் மணிமாடம் வாழ்ந்தாலும் எல்லோர்க்கும் தாயாக இருந்தாயம்மா இருந்தாயம்மா