வாழ்க்கை வெளிக்கவென வழி தேடிச் திரிஞ்சம் இயலாமல் முடியாமல் நாட்ட விட்டே பறந்தம் இடையில் நடு வழியில் காடு நாடா நடந்தம் வந்தடைஞ்ச நாட்டிலயும் அகதியா அலைஞ்சம் புலத்தைப் பிரிஞ்சு வந்தாள் நிம்மதி இல்லை புதிய உலகம் இது பழக்கமும் இல்லை புதிர்கள் தொடர்ந்து வர தினம் தினம் தொல்லை புலரும் பொழுது என்றும் நம்பிக்கை இல்லை வாழ்வு சிறக்குமென பறந்து வந்தாச்சு அக்கரைக் கிக்கரை பச்சை யென்றாச்சு மிச்சமாய் இருந்திட்ட அமைதியும் போச்சு பட்சமாய் பழகுவோர் இல்லை போலாச்சு மனசு வெம்பியது இதயம் விம்மியது கேள்வி நிரம்பியது துன்பம் துரத்தியது அனைத்தும் அரட்டியது தனிமை வாட்டியது உலகம் மரட்டியது வாழ்க்கை இருட்டியது அதுக்கு பலருமிங்க விதி விலக்கில்லை பகட்டு வாழ்க்கை இங்கு வழக்கமாய் ஆச்சு மொத்தமா வாழ்க்கையே சொத்தியா போச்சு தினசரி ஓட்டமே பலர்க்குத் திண்டாட்டம் தலை போற கடனென அழும் பெரும் கூட்டம் ஊருக்கும் உறவுக்கும் மறைப்பது என்ன பேருக்கு படம் காட்டிப் பிழைப்பது என்ன காசு மரக்கதைகள் வெறும் பொய்ப் பேச்சு சொகுசு வாழ்க்கை இங்கு சிலருக்கே ஆச்சு வாழ்வு பலருக் கிங்கு சுமை வேறில்ல சத்தியம் சொல்லுறன் மெய் வேறில்லை ஒப்பிட்டே ஒப்பிட்டே பாழ் பட்டுப்போறம் கண்கட்டி கடன்பட்டு லோல் பட்டுப்போறம் உருப்பட்ட வழியதை விலத்திட்டுப் போறம் உலகத்தை ஏமாத்தி ஏமாந்து போறம்