Kishore Kumar Hits

vaisagh - En Rant Ah Konjam Kelu - From "Think Indie" lyrics

Artist: vaisagh

album: En Rant Ah Konjam Kelu (From "Think Indie")


மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா
இந்தினநிலை தள்ளாடி தவிக்குது நண்பா
இல்லாத சோகம் எல்லாம் கூடி வந்து காது மேல ஏறி செய்யும்போது
பொல்லாத காதல் காஜி carrier கடமை எதுவும் இங்கு ஏற்றம் கண்டிடாது
நான் பொலம்ப வந்து நிக்கிறேன் என் rant'a கொஞ்சம் கேளு
மனம் கொலம்பி வந்து நிக்கிறேன் என் rant'a கொஞ்சம் கேளு
நெஞ்சு நிரம்பி வந்து நிக்கிறேன் என் சோக கதைய கேளு
விழி தழும்பி வந்து நிக்கிறேன் என் rant'a கொஞ்சம் கேளு

சின்ன சோகம் பெரிய சோகம் எதுவும் இங்க இல்ல
Blessing எல்லாம் என்ன சொல்ல என்னத்த நான் சொல்ல
மனசு முழுக்க இருக்கும் வலிக்கு மாத்திரையே இல்ல
தேடி பாத்து theropy போக தெம்பும் இங்க இல்ல
பாட்டு சளிச்சது படமும் சளிச்சது
Porn'ம் சளிச்சது பானமும் சளிச்சது
நேத்தும் சளிச்சது நிலவும் சளிச்சது
காத்தும் சளிச்சது காதலும் சளிச்சது
என் கவல மறைய கவித சொன்னேன் என் பாட்ட கேளு நண்பா
என் கண்ணீர் கதைய கலந்து சொல்றேன் concern காட்டு நண்பா
என் சிதறி கிடக்கும் self-love எல்லாம் சிரிக்கிதடா நண்பா
என் மழுங்கி போன mental health'ல் மழைய ஊத்து நண்பா

என் rant'a கொஞ்சம் கேளு

ஒரு நாள் அழுதா சோகம் தீருமா
உன்னைப்போல மனுஷனுக்கு oversharing ஆகுமா
Tragedy இல்லா art'u இங்க ஏதுமா
Heart'u break'ல் வளர்ந்திடாத Jordan இங்க யாருமா
Trigger ஆகிடாம பாத்துக்கோ safe space ஒன்னு சேர்த்துக்கோ
Oneday at a time'uனு உன்ன நீயே தேத்திக்கோ
ஞாபகத்த பொதசுக்கோ நாளும் பொழுதும் சிரிச்சுக்கோ
இத்தனையும் தாண்டி வந்தா இன்னும் என்ன தொடச்சுக்கோ
அழுதா ஆராதது எதுவும் இல்ல நண்பா
அத்தனைக்கும் பிறகு ஒரு பூ பூக்கும் நண்பா
Self-harm செய்வதெல்லாம் சிற்றின்பமா நண்பா
Survive செஞ்சு காட்டு subtle'ah நீ நண்பா

என் rant'a கொஞ்சம் கேளு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists