ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
♪
கலங்குதே கண் கலங்குதே
கதறியே நெஞ்சு நொறுங்குதே
பொங்க வச்ச தங்க கொடம் பொத்தலும் விட்டிரிச்சே
மாசறியா வைர மணி மண்ணுல சாஞ்சிருச்சே
அரிக்கேன் விளக்கே இருட்டாயிறிச்சே
பசும் பால் வெளுப்பே கருப்பாயிருச்சே
கம்மாங்கரை ஆயிறுச்சு கட்டாந்தரை-ஓ-ஒ
கண்ணீருல சாஞ்சிருச்சே செந்தாமரை
முட்டி முட்டி ஊரு சனம் முன்னே வர-ஓ-ஒ
முக்கத்துல நின்னுடுச்சே மூணாம் பிறை-ஓ-ஒ
புழக்கடையில முளைச்சாலும் துளசிக்கு ஒரு வாசம்
தெரு புழுதியில் புரண்டாலும் வாழுமே நெசம்
கொடி அடுப்புல பொகை போல பொசுங்குது ஒரு கூட்டம்
களை எடுத்திட துணிஞ்சாலே காலம் மாறிடும்
♪
வயக்காட்டுல உழைச்ச நாங்க
எந்த பாடமும் படிக்கல
நெதம் சேத்துல கெடக்குறோமே
அத சாமியும் தடுக்கல
காச கேக்கும் கல்வி கனவாகி போனதே
நீரு மேல போட்ட ஒரு கோலம் ஆனதே
காதருந்த ஊசியில சட்டைய தைக்கணுமா
கைய கட்டி வாய பொத்தி நாங்களும் நிக்கணுமா
தலை எழுத்தே புரியலன்னு ஒப்பாரி வைக்கணுமா
கம்மாங்கரை ஆயிறுச்சே கட்டாந்தரை-ஓ-ஒ
கண்ணீருல சாஞ்சிருச்சே செந்தாமரை
முட்டி முட்டி ஊரு சனம் முன்னே வர-ஓ-ஒ
முக்கத்துல நின்னுடுச்சே மூணாம் பிறை-ஓ-ஒ
Поcмотреть все песни артиста
Other albums by the artist