Kishore Kumar Hits

Dhanush - Megham Karukatha (From "Thiruchitrambalam") lyrics

Artist: Dhanush

album: Megham Karukatha (From "Thiruchitrambalam")


மேகம் கறுக்காதா பெண்ணே, பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே, பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே, பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே, பெண்ணே
கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்
Confusion ஆகிறேன் உள்ளுக்குள்ளே
பறக்கப் பறக்கத் துடிக்குதே, பழகப் பழகப் பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே, பெண் தோகை வருடுதே
பறக்கப் பறக்க, பழகப் பழக
பழைய ரணங்கள், பெண் தோகை வருடுதே
மேகம் கறுக்காதா பெண்ணே, பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே, பெண்ணே

மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்
கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும் என்று கேட்கிறேன்
என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்
என்னுள்ளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன்
கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்
Confusion ஆகிறேன் உள்ளுக்குள்ளே
பறக்கப் பறக்கத் துடிக்குதே, பழகப் பழகப் பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே, பெண் தோகை வருடுதே
பறக்கப் பறக்க, பழகப் பழக
பழைய ரணங்கள், பெண் தோகை வருடுதே
மேகம் கறுக்காதா பெண்ணே, பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே, பெண்ணே
தேகம் நனையாதா
தீயும் அணையாதா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists