Kishore Kumar Hits

Justin Prabhakaran - Aagoozhilae lyrics

Artist: Justin Prabhakaran

album: Radhe Shyam


யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ
நீங்கிபோவதற்கா
இந்த ஞாபகம் ஞாபகம்
நாளை சேர்வதற்கா
இந்த நாடகம், இந்த நாடகம்
அடர்காட்டிலே விழுந்திடும் துளிகளாய்
அவன் ஏட்டிலே இலக்கணப் பிழைகளாய்
நீயும் நானும்
ஆகூழிலே... ஏ ஆகூழிலே... ஏ
ஆகூழிலே... ஏ ஆகூழிலே... ஏ

யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ

இரு நிழல்களும் உரசியதோ
இருதயம் இடம் நழுவியதோ
சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்
முடிவிலியினில் தொடங்கிடுமோ
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ
சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்
காலத்தை பின்னே இழுத்திட முயல்வதும்
காலத்தை முன்னே நகர்த்திட துடிப்பதும்
எங்கே காலம் பாயும்
காண்போம் நானும் நீயும்
ஆகூழிலே... ஏ ஆகூழிலே... ஏ
ஆகூழிலே... சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்(ஆகூழிலே)
சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்
யாரோ யாரவனோ
உனை தாண்டி சென்றவனோ
உந்தன் கண் அறியா
தொலைதூரக் காதலனோ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists