Kishore Kumar Hits

Vishal Chandrashekhar - Hey Sita Hey Rama lyrics

Artist: Vishal Chandrashekhar

album: Sita Ramam (Tamil) (Extended Version) [Original Motion Picture Soundtrack]


ஹே சீத்தா, உயிர் நுழைய வாசல் தா
ஹே சீத்தா, உன்னில் வசிக்க வாய்ப்பை தா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா
ஹே ராமா, எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா, நிழல் அறிய வேண்டாமா
நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா?
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா?
ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே இருக்குமா சும்மா
ஹே சீத்தா, இந்த திரிக்கி தீயை தா
ஹே ராமா, எனை பிரிய வேண்டாமா

கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா
ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
என் உலகம் என்னாகும்

இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்வேன் என்று நான் காட்டினேன்
விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா?, வலிகள் ஓவியம் ஆகுமா?
உனை நான் அருகிலே கண்டு உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா
ஹே ராமா, உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி அதை பருக வேண்டாமா
என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists