Kishore Kumar Hits

Vijayabhaskar - Aagayam Thaane lyrics

Artist: Vijayabhaskar

album: Kavingar Vaali Tamil Film Songs


ஆகாயம் தானே அழகான கூரை
காணுமிடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
ஆகாயம் தானே அழகான கூரை
காணுமிடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணா விளையாடு
கல்யாண மந்திரம் பாடு

நீலக் கருவிழிகள் நீண்ட கதை பேச
கோலக் கொடிமலர் இது பருவ மணம் வீச
மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடையழகினை இரண்டு கரம் ஏந்த
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
கேட்க வேண்டும் மங்கள மேளம்
காண வேண்டும் மணவறை கோலம்
இரவும் பகலும் உறவு தோன்றிட
கல்யாண மந்திரம் பாடு
ஆகாயம் தானே அழகான கூரை

கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற
ஊதும் குழலிசை அது உணர்வுகளை தூண்ட
கங்கை நீரலை போல் கார்குழல் தான் ஆட
கொஞ்சும் மலரணையினில் அமுத நதி ஓட
நாணம் கொண்டு சிற்றிடை வாட
நாணம் நூறு முத்திரை போட
நாணம் கொண்டு சிற்றிடை வாட
நாணம் நூறு முத்திரை போட
இருவர் நினைவில் இனிமை கூடிட
கல்யாண மந்திரம் பாடு...
ஆகாயம் தானே அழகான கூரை
காணுமிடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணா விளையாடு
கல்யாண மந்திரம் பாடு
ஆகாயம் தானே அழகான கூரை

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists