Kishore Kumar Hits

Joshva Sridhar - Allahve Engalin lyrics

Artist: Joshva Sridhar

album: Aran (Original Motion Picture Soundtrack)


அல்லாவே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய தால் ஏரி
அல்லாவே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய தால் ஏரி
பூவனம்
போர்க்களம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாதா
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாதா
உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாதா
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாதா
ஒ . அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனதா
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதா
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று
ஒ எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழத்தானா
ஒ எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா
எங்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
ஒ அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
ஒ அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்
எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஒ ஹோ ...
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்காடாய் யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேட்கும்
சதி எல்லாம் யார் செய்தார்
கலவரம் முடியுமா
நிலவரம் மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
ஒ . சாவினை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவினை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்ததாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம் கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists