Kishore Kumar Hits

Praveen - Varayaatha Oviyam lyrics

Artist: Praveen

album: Koorman


வரையாத ஓவியம்
பிழையாகிப் போனதே
திரைபோடும் வாழ்விலே
இருள் தானா நிரந்தரம்
மழைக்காக ஏங்கிடும்
வெயில் காயும் மனம் தினம்
இனிமேல் நான் வாழ்வது
மரணம் போல் ஆனதே
அனல் மேலே துடித்திடும்
அணில் போலே தினம் தினம்
பிணமாக நடந்து நான்
உன்னால் வாழ்கிறேன்
என் அன்பே
உன்னில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
வரையாத ஓவியம்
பிழையாகிப் போனதே
திரைபோடும் வாழ்விலே
இருள் தானா நிரந்தரம்
அனல் மேலே துடித்திடும்
அணில் போலே தினம் தினம்
பிணமாக நடந்து நான்
உன்னால் வாழ்கிறேன்
என் அன்பே
உன்னில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்

பெண்ணே இங்கு உன்னால் தானே
அர்த்தம் ஆகும் எந்தன் ஆயுள்
கண்ணாமூச்சி போதும் காதலி
கண்ணால் எனை வெல்லும் பார்வை
கண்டேனடி கொஞ்சும் போது
மெய் போல பொய் ஆனாய் காதலி
நினைவாலே நினைவாலே விரைகின்றேன்
உயிர் போகும் தினம் வேண்டி
உன்னால் வாழ்கிறேன்
என் அன்பே
உன்னில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
ஹே
ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ...
என் தோகையில் வண்ணம் சேர்க்கும்
உன் சாயலில் அன்பின் பூக்கள்
பெண் வாசம் உன் வாசம் வீசுதே
கண் பேசிடும் மஞ்சள் பூவே
என் வானத்து மின்னல் தீயே
உன் ஞாபக ஆற்றில் மூழ்கி நான்
புனலாடி விளையாட நினைத்தேனே
சுழல் மூழ்கி தவித்தே தான்
உன்னால் வாழ்கிறேன்
என் அன்பே
உன்னில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
வரையாத ஓவியம்
பிழையாகிப் போனதே
திரைபோடும் வாழ்விலே
இருள் தானா நிரந்தரம்
அனல் மேலே துடித்திடும்
அணில் போலே தினம் தினம்
பிணமாக நடந்து நான்
உன்னால் வாழ்கிறேன்
என் அன்பே
உன்னில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்
சொல்லால் வாழ்கிறேன்
நீ சொன்ன சொல்லில் வாழ்கிறேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists