அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ நாங்கலெல்லாம் ஓருயிர்தான் நடந்துவந்தால் ஓர் நிழல் தான் நாம் சிரித்தால் மெல்லிசைதான் அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ ♪ கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம் திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம் எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம் தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம் தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ ♪ கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான் கைகள் வேறு ரெக்கைகள் ஒன்றுதான் அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான் உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான் கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள் நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள் பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ நாங்கலெல்லாம் ஓருயிர்தான் நடந்துவந்தால் ஓர் நிழல் தான் நாம் சிரித்தால் மெல்லிசைதான் அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ