S. J. Berchmans - Vaanankalae lyrics
Artist:
S. J. Berchmans
album: Jebathotta Jeyageethangal, Vol. 30
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
சர்வவல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம்மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
♪
கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
பால்குடிக்கும் பாலகனை தாய் மரப்பாளோ?
மறந்து போவாளோ?
கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
இரங்காதிருப்பாளோ?
தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
♪
கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகனே
கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகளே
உன்னைப் பாழாக்கினவர்கள் புறப்பட்டுப் போகிறார்கள்
தூரமாய் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
பாடி மகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை
சபை நீ அணிந்து கொள்வாய்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
சர்வவல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம்மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
Поcмотреть все песни артиста
Other albums by the artist