Kishore Kumar Hits

Ps. Alwin Thomas - Aar Ivar Aaraaro lyrics

Artist: Ps. Alwin Thomas

album: Crispy Christmas


ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார்?
சரணங்கள்
பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ? — ஆர்
மேசியா இவர்தானோ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ? — ஆர்
தித்திக்குந் தீங்கனியோ? – நமது தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ? — ஆர்
பட்டத்துத் துரைமகனோ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ? — ஆர்
ஜீவனின் அப்பமோதான்? – தாகம் தீர்த்திடும்பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ? — ஆர்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists