Kishore Kumar Hits

Jeeva - Para Para Para Pattampochi lyrics

Artist: Jeeva

album: Tamil M.A.


பர பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இலலை படகு ஆனதே
பர பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு

இன்பம் ஒருபுறம் என்று
துன்பம் மறுபுறம் நின்று
சுற்றி சுழலுது இந்த மண் மேலே
தன்னன்தனி ஆள் என்று
யாரும் இல்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே
ஏதோ ஏதோ ஓர் உணர்ச்சி
எாி தணலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி
மனம் சிற்பமாகுதே
எதிரிலே அந்த மழலைக் காலம்
மீண்டும் திரும்புதே
பர பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு

வாழ்க்கை என்பது என்ன பள்ளிபாடமுமல்ல
கற்று கொண்டதை மெல்ல முன்னேற
காதல் என்பது என்ன புள்ளி கோலமுமல்ல
காற்றில் கலையும் போது தள்ளாட
எங்கோ எங்கோ
ஓர் உலகம் உனக்காக
காத்து கிடக்கும்
நிகழ்காலம் நதியை போல மெல்ல
நகர்ந்து போகுதே
நதி காயலாம் நினைவில்
உள்ள காட்சி காயுமா
பர பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு
கண்ணீரை துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இலை படகு ஆனதே
பர பர பர பர பர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை அது மாறிப்போச்சு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists