Kishore Kumar Hits

Malaysia Vasudevan - Bharathikku (From "Priyamudan") lyrics

Artist: Malaysia Vasudevan

album: S.P.Balasubrahmanyam and Malaysia Vasudevan Hits


பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நீ நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists