எல ஏலோ ஏலேலையேலோ
எல ஏலோ ஏலேலையேலோ
பேரழகன் உன் பேர சொல்லி (தந்ததின)
போகுதம்மோ ஒரு வாடாமல்லி (தந்ததின)
ஓலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி (தந்ததின)
தூசுதட்டி குடி புகுந்ததம்மோ (தந்ததின)
மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி (தந்ததின)
மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ (தந்ததின)
சவரக்கத்தி மின்னுக்குதம்மோ (தந்ததின)
எவர பத்தி நெனைக்குதம்மோ (தந்ததின)
♪
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
♪
வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி (தந்ததின)
வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ (தந்ததின)
காத்துல தான் ஒரு செய்தி வந்து (தந்ததின)
நேத்தே எல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ (தந்ததின)
காட்டுமல்லி அந்த கதைய சொல்லி (தந்ததின)
பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ (தந்ததின)
குத்தால சீமைக்கு முத்தாட போவுது
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது
கத்தால பூவுக்கு கச்சேரி கூடுது
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது
பேரழகன் உன் பேர சொல்லி (தந்ததின)
போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி (தந்ததின)
ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி (தந்ததின)
ஆறுதலா வந்து சேருதம்மோ (தந்ததின)
காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ (தந்ததின)
சித்திர வெய்யிலு சில்லுனு காயுது
நெத்திலி மீனுக்கு நித்திர போவுது
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது
கூரையில்லா கோட்டைக்குள்ள
சூரியனும் சிரிக்குதம்மோ
சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
சூரியனும் சிரிக்குதம்மோ
எல ஏலோ ஏலேலையேலோ
எல ஏலோ ஏலேலையேலோ
Поcмотреть все песни артиста
Other albums by the artist