Kishore Kumar Hits

Godson Rudolph - Criminal Crush lyrics

Artist: Godson Rudolph

album: Criminal Crush


Hey பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்
Hey பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
Hey பெண்ணே நான் வாழ நீதானே காரணம்
Hey பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்
Hey பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்
Hey பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
Hey பெண்ணே நான் வாழ நீதானே காரணம்
Hey பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்
எனக்கென யாருமில்லை என்றே நானிருந்தேன்
Oh-oh-oh, எந்தன் முன்னே
Oh-oh-oh, நீயே வந்தாய்
மழைக்கால ஊற்றைபோல உள்ளே நீ எழுந்தாய்
Oh-oh-oh, எந்தன் முன்னே
Oh-oh-oh, நீயே வந்தாய்

Oh, என் காதல் நான் சொல்லி
இதயத்தை தந்தேன் பெண்ணே
உன் உயிரில் என் உயிரை தைத்தாயே
இந்தநொடி ஒருபோதும் எந்தன் வாழ்வில் மறவேன் பெண்ணே
உன்னோடு கைகோர்த்து வருவேனே
ஆஹா தன்னந்தனியாக இருந்து வந்தேனே
வாழ்வின் துணையென நீயும் வந்தாய்
எந்தன் வாழ்க்கையும் வசந்த காலமே வெள்ளை இரவிலே
ஆஹா உண்மைக் கவிதையே தங்க அருவியே
காதல் சுடரென நெஞ்சில் எழுந்தாய்
இன்னோர் பிறவியும் எனக்கு தேவையே உன்னுடன் வாழவே

என் முன்னே நீ வந்தாய்
சிலையாக நான் நின்றேன்
உன் பார்வை நொடிப்பொழுதில் கனவாடுதே
உன் காதல் நீ சொல்ல
எனை நான் மறந்தேன் அன்பே
உன்னோடு சேர்ந்திடவே துடித்தேனே
பனிசுடும் வேளையில் பெண்மை உருகுதே
இசை ஒன்று இசைத்திட இன்பம் பெருகுதே
மெல்லென உயிரினில் இன்பம் தூண்டுதே தீயில் நனையுதே
ஆஹா கன்னங்கள் ஓரமாய் கவிதை எழுதவா
மௌன மொழிகளில் காதல் பேசவா
கண்கள் மோதியே மின்னலின் அதிர்வொலி என்னில் பாயுதே
Hey பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்
Hey பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
Hey பெண்ணே நான் வாழ நீதானே காரணம்
Hey பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்
எனக்கென யாருமில்லை என்றே நானிருந்தேன்
Oh-oh-oh, எந்தன் முன்னே
Oh-oh-oh, நீயே வந்தாய்
மழைக்கால ஊற்றைபோல உள்ளே நீ எழுந்தாய்
Oh-oh-oh, எந்தன் முன்னே
Oh-oh-oh, நீயே வந்தாய்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists