லோகம் மாறிடாது உன் வார்த்தைக்கு ஓசை கேட்டிடாது பல காதுக்கு மனம் தளராதே உன் பலமே, உனை தேற்றுமே தடம் புரளாதே உன் திடமே கரை ஏற்றுமே லோகம் தூங்குதடா பொய் தூக்கமே! யோசனை நீசொன்னால் உனை தூற்றுமே! அறிந்தால் இங்கே வைராக்கியம் விழுதாகுமே! துணிந்தால் இங்கே வருங்காலமே தலை தூக்குமே! தாயின் மண்ணுக்கு உயிர் தந்த பேர் பல பிறந்த கடனுக்கு நீயும் செய்ததென்னடா ஜீவ ராசியில் நீயே புத்திமானடா தெரிந்தும் கண்கட்டினால் யாவும் இங்கு வீணடா மனிதா! மனிதா! நீ மாற வேண்டும் முதலில் மனிதா! மனிதா! நீதானே அறிவின் நிழலில் உலகில் உருவாகிடும் மனித இனத்தானுக்கு படைப்பைத் தடுக்கும் பலமோ எதுவும் இல்லை சூர்ய கதிர் பாயுது காற்று மழை வீசுது அதனை எதிர்க்கும் சக்தி நமக்கில்லையே மனிதா! மனிதா! நீ மாற வேண்டும் முதலில் மனிதா! மனிதா! நீதானே அறிவின் நிழலில் அறுவடை அரிவாள்கள் மௌனம் ஆனால் எல்லை வீரர்கள் மௌனம் ஆனால் உன் கதை என்ன? சொல்லடா மனிதா! இயற்கை ரணமாகி சினம் காட்டினால் சுயநல பேயாகி பொருள் மீட்டினால் உன் கதை என்ன? சொல்லடா மனிதா! மனிதா! மனிதா! நீ மாற வேண்டும் முதலில் மனிதா! மனிதா! நீதானே அறிவின் நிழலில் மனிதா! மனிதா! நீ மாற வேண்டும் முதலில் மனிதா! மனிதா! நீதானே அறிவின் நிழலில்