Kishore Kumar Hits

Harish Raghavendra - Aagaya Suriyanai (From "Samurai") lyrics

Artist: Harish Raghavendra

album: Hits of Harish Ragavendra

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்
உன்னை கொஞ்சும் என்னமோ
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
காதல் பந்தியில்
நாமே உணவுதான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும்
விந்தை இங்கேதான்
காதல் பார்வையில்
பூமி வேறு தான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம் தா
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன்
காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்கம் வந்தது
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
என்னை கண்டதும்
ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான்
எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொல்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ
பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists