Kishore Kumar Hits

Santhosh Narayanan - Kadhal Kappal (From "Iraivi") lyrics

Artist: Santhosh Narayanan

album: Best of Santhosh Narayanan (Tamil)


கண்ணக் காட்டி மொரைச்சா
ஒத்தவாட்டி சிரிச்சா போதும்
சொச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளிர்க்கும் நேரம்

ஒன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
மொத்தமாக எனக்கு உன்னத்தானே பிடிக்கும் மோகம்
உன்னத்தேடித் துடிக்க இரத்த நாடி வெடிச்சித்தாவும்

மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னுக் கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா

கொத்துக்கொத்தா அழக பொத்தி வச்சா வழியும்
அங்கதானே ரதியா நீ இருப்ப
நித்தம் ஒன்னில் கலந்து நித்திரையும் மரந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்
ஹே ஒன்னாலத்தானே மழ மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீ தானே ராணி நெஞ்சுக்குள்ள
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists