Kishore Kumar Hits

Devan Ekambaram - Naan Odum (From "Pudhiya Geethai") lyrics

Artist: Devan Ekambaram

album: Hits of Tippu and Devan

பரித்ராணாய ஸாதூநாம்
விநாஷாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய
ஸம்பவாமி யுகே யுகே

ஹோயா நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்
எந்த வேலையும் செய்வேன் அதில் ஏற்றத்தாழ்வு ஏது
அட உன்னை நம்பியே நின்றால் உனை ஊரும் பேசாதோ
நெற்றி வேர்வையை சிந்த ஒரு நேரம் காலம் என்ன
அட வெற்றி என்றொரு தென்றல் நம் வாசல் வந்து வீசாதோ
ஹோயா நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்

போகவில்லை நேரம் என பேசாதீர்கள் யாரும்
அது போதவில்லை என்றே சொல்லி வேலை செய்யுங்கள்
அட இமயம் என்ன இமயம் நீ இதயம் வைத்தால் அதையும்
அள்ளி ஏந்தக்கூடும் உள்ளங்கையில் என்றும் நீங்கள்
மனிதன் என்னும் சொல் பெரியதடா
கொடுத்திடு அதற்க்கொரு பெருமையடா
பிறர் கண்ணிலே வரும் நீர்துளி எந்த கைகள் துடைக்கும்
அந்த கைகள் தான் அன்பு காவியம் இந்த மண்ணில் படைக்கும்
ஹோய் நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்

என்ன நேரும் நாளை என எடுத்துக்கூறும் மூளை
அந்த தெய்வம் இங்கு யாருக்குமே தந்ததில்லையே
அட இங்கே இப்போ இன்று என எதையும் செய்தால் நன்று
நாம் சொல்லும் வார்த்தை நண்பா கொஞ்சம் சிந்திப்பாயே
இருக்கின்ற பொழுதை பயன்படுத்து
தடைகளை உடைத்து தலை நிமிர்த்து
இந்த தேதி தான் இந்த வேளை தான் இனி போனால் வருமா
இது ஒன்று தான் நிஜம் என்று தான் நாம் வாழ்வோம் நலமா
ஹோய்... ஹோய்... நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்
எந்த வேலையும் செய்வேன் அதில் ஏற்றத்தாழ்வு ஏது
அட உன்னை நம்பியே நின்றால் உனை ஊரும் பேசாதோ
நெற்றி வேர்வையை சிந்த ஒரு நேரம் காலம் என்ன
அட வெற்றி என்றொரு தென்றல் நம் வாசல் வந்து வீசாதோ
ஹோயா நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
அந்த கீதை சொன்ன பாதை போவேன்
ஹோய் நான் ஓய்வதில்லையே கண் சாய்வதில்லையே
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists