Kishore Kumar Hits

Harini - Siru Paarvayale (From "Bheema") lyrics

Artist: Harini

album: Hits of Bhavatharini and Harini


சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
நீ தூரப் பச்சை... என் நெடுநாள் இச்சை...
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத் தீவே...
தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உனை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
விழியே, ஆ கைபா கைபா
மடியே, ஆ கைபா கைபா
விழியே, ஆ கைபா கைபா
மடியே, ஆ கைபா கைபா
உதய்க்கும் மலைகளிலே
மிதக்கும் படையெனவே
மறைக்கும் முகிலிடையே
சிரிக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே
அதட்டிப் பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே
நொறுங்கி உடைகிறதே
உன் நெஞ்சில் இட்டு என்னைத் தாலாட்ட
என் கர்வம் எட்டிப் பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய் பாராட்ட... (சிறு பார்வையாலே...)
சிலிர்க்கும் செடிகளிலே
துளிர்க்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே
கிடைக்கும் முதல் சுவையே
விழுந்தேன் இரவினிலே
எழுந்தேன் கனவினிலே
கனவில் நீ வந்தாய்
மறந்தேன் வெளிவரவே...
ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே...
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே...
நீ கொஞ்சும் போது பாழும் நஞ்சு...
ஆனால்கூட அள்ளி உண்பேனே...
ஆ ஆ ஆ ஆ அடி பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே
நீ தூரப் பச்சை, என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைப் தீவே...
தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists