Kishore Kumar Hits

Harini - Azhagana Rakshasiyea (From "Mudhalvan") lyrics

Artist: Harini

album: Hits of Bhavatharini and Harini


அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

சூாியன ரெண்டு துண்டு
செஞ்சு கண்ணில் கொண்டவளோ ஓ... ஓ...
சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ... ஓ...
ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ ஓ... ஓ...
மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ... ஓ...
துறவி என்னத் தொலைச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
புளியம் பூவே
சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
மகிழம் பூவே
தேன் கூட்டப் பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா ஓ... ஓ...
காதல் என்ன கட்சி விட்டுக்
கட்சி மாறும் காாியமா ஓ... ஓ...
பொண்ணு சொன்னா தலைகீழா
ஒக்கிப்போட முடியுமா ஓ... ஓ...
நான் நடக்கும் நிழலுக்குள்
நீ வசிக்க சம்மதமா
நீராக நானிருந்தால்
உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில்
குதிச்சி அங்க குடியிருப்பேன்
காடா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists