ஓ னானனா இளைய நிலவே னனா னனனா இளைய நிலவே னனா னனனா இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ நீ தானடி என் நிம்மதி ஓர் வான்மதி உனது திசையில் ஏன் இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ ♪ இசைக்கும் குயிலே மௌனம் சுமந்தால் ஏங்கும் ஏங்கும் பூங்காற்று உறக்கம் இழந்து தவிக்கும் எனக்குள் வேறு ஏது தாலாட்டு வசந்தமே போன பின் பாடுமோ பூங்குயில் வாழ்வெல்லாம் கோடையே ஆடுமோ பொன் மயில் உன் கண்களில் நீர்க் கோலமோ என் நெஞ்சினை கலங்க விடலாமோ இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ ♪ நடந்த நதியும் கடந்த பொழுதும் மீண்டும் திரும்புமோ இங்கே வெளிச்ச நிலவு இருட்டில் அழுதால் வானம் இருளுமே அன்பே கனவென்னும் மலர்களை விதைத்ததார் பூ முகம் யார் மனம் யாரிடம் வாழ்கையோ நாடகம் ஓ வான்மதி ஏன் தனி வழி உன் பாதையை மாற்றிச் செல்லலாமா இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன சலனமோ புதிய திசையில் உதிக்க நினைத்தால் எந்தன் மனம் தாங்குமோ நீ தானடி என் நிம்மதி ஓர் வான்மதி உனது திசையில் ஏன் இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன சலனமோ