விழி நீங்கிப்போகுதே காட்சிகுள் நீங்கிப்போகுதே சுவாசம் உடல் நீங்கிப் போகுதே நெஞ்சம் வெறும் யாக்கை ஆனதே என் வாழ்க்கை இங்கே வாழ்க்கை இங்கே எனதுயிர் எங்கே? எனதுயிர் எங்கே? விழி வழி நீராய் வழிகின்றேன் தொலைகின்றேனடி எனதுயிர் எங்கே? எனதுயிர் எங்கே? கனவென நானும் உடைகின்றேன் கலைகின்றேனடி தொலைவில் தொலைந்தாயோ? எனக்காய் அழுதாயோ? உன் கண்ணீர் தடங்கள் மயிற்கற்கள் ஆகுதே எதிரே உதிப்பாயோ? உனை கடந்தே நடந்தேனோ? என் தேடல்கள் யாவுமே பொய்யாகுதே, நீ ஏன் நீங்கினாய்? ஏன் நீங்கினாய்? ஒரு மாயம் போல நீ நின்றாய் அந்தக் காதல் மீண்டது இன்றாய் ஒரு மாயம் போல நீ சென்றாய் வெறும் காயம் ஆகியே காய்கின்றாய் இங்கே இங்கே எனதுயிர் எங்கே? எனதுயிர் எங்கே? ஒரு வழிக் காட்டில், உயிரூற்றில் கரைகின்றேனடி எனதுயிர் எங்கே?