Adhya - Polladha Boomi lyrics
Artist:
Adhya
album: Polladha Boomi
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு
வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே
ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு
யார் மேல யார் கீழ போடாத ரூலு
போராட எண்ணாட்டி மாறாதே நாளு
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும்
ஆக மாட்டேன் மூச்சே போனாலும்
ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
கட்டாரியும் கோடாளியும்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ
பச்சோந்தியா வாழாத
உன் தன்மானம் ஊர காக்காதோ
மண்வாசனை உன்மேலத்தான்
மக்காம வீசும் குடிகொண்டு
உன் பேருல பத்தூரையும்
பட்டாவ போடும் கவர்ன்மெண்ட்
ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்
கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து
Поcмотреть все песни артиста
Other albums by the artist