Kishore Kumar Hits

K. Veeramani - Unnidatthil lyrics

Artist: K. Veeramani

album: Mayilai Kapaleecharam Magimai


உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்
உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்
சென்னை நகர் மயிலாப்பூர்
அன்னை நீ அருகிருக்க
சொன்னது பலிக்குதம்மா
ஆ-ஆ-ஆ-ஆ
உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்

மயிலாக நீ வந்து
மலர் தூவிப் போற்றி நின்றுக்
கணவனை வணங்கி நிற்கும்
காட்சி கண்டேன்
மயிலாக நீ வந்து
மலர் தூவிப் போற்றி நின்றுக்
கணவனை வணங்கி நிற்கும்
காட்சி கண்டேன்
உபதேசம் அவன் சொல்ல
ஒரு முகமாய் கேட்பதற்கு
வழிகாட்ட நீ வந்தாய்
வரம் பெற நான் வந்தேன்
உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்

மஞ்சள் முகக் குங்குமத்தில்
மாங்கல்யம் மணிக்கயிற்றில்
நெஞ்சம் பறிகொடுத்து
நிலை மறந்தேன்
மஞ்சள் முகக் குங்குமத்தில்
மாங்கல்யம் மணிக்கயிற்றில்
நெஞ்சம் பறிகொடுத்து
நிலை மறந்தேன்
மலர் ஆடை நீ உடுத்து
வரவேற்று உபசரிக்கும்
அழகுக்கு அடிமைப்பட்டேன்
அன்புக்கு கட்டுப்பட்டேன்
உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்
சென்னை நகர் மயிலாப்பூர்
அன்னை நீ அருகிருக்க
சொன்னது பலிக்குதம்மா
ஆ-ஆ-ஆ-ஆ
உன்னிடத்தில் நான் இருக்க
என்ன குறை எனக்கு அம்மா
நன்றியினை மறப்பேனோ நான்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists