Kishore Kumar Hits

K. Veeramani - Idhu Paarijathavanam lyrics

Artist: K. Veeramani

album: Ashta Veerattaanam


இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்
அந்தப் பாவியின் மமதையினால்
பரியலூர் ஆனதே
அந்தப் பாவியின் மமதையினால்
பரியலூர் ஆனதே
தலை பறிக்கப் பெறல் ஆனதே
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்

அரக்கத் தலைப் போய்
ஆட்டுத் தலை வந்த
கதையைக் கேளுங்கள்
அக்கிரமக்காரர்கள்
பெறுகின்ற முடிவை
வந்துப் பாருங்கள்
இங்கே வந்துப் பாருங்கள்

நிர்மலமான யோகியின்
கோபம் என்னாகும்?
நீலகண்டன் இல்லா
யாகம் நிர்மூலம்
பார்வதி வந்தும்
பட்டாள் அங்கே அவமானம்
ஆணவம் அங்கே
தலைவிரித்தாடிய அலங்கோலம்
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்

சிவனை மறந்தொரு செயல் செய்வதா?
அதற்கு தேவர்களும் உடந்தை சதி என்பதா?
அவமரியாதைக்கொரு அளவில்லையா?
அந்த அரக்கனை அடக்க ஓர் ஆளில்லையா?
தாக்ஷாயணியின் கண்ணீர் துளிகள்
கூர் வாளாகிறது
தந்தை என்றாலும் தக்ஷணின்
ஆணவத் தலைப் பறிபோகிறது
வீரபத்திரனின் சேனைப் புகுந்து
விளையாடி வருகுது
போரினில் இது போர்
யாவர்க்கும் இது ஓர்
பாடம் சொல்கிறது
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்

தக்ஷன் தனது தவறை உணர்ந்து
சாந்தி பெற்றானே
பொற்கலன் என்னும் வேடன்
தவத்தால் வால்மீகி ஆனானே
பாவங்கள் யாவும் பறித்துக் கொள்ளும்
பார்த்த மாத்திரமே
அரியலூர் சிவனின் வீரத்தாணம்
அற்புத க்ஷேத்திரமே
அதி அற்புத க்ஷேத்திரமே
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்
அந்தப் பாவியின் மமதையினால்
பரியலூர் ஆனதே
தலை பறிக்கப் பெறல் ஆனதே
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்
இது பாரிஜாதவனம்
ஒரு பவித்ரமான இடம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists