இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா நொந்துப் போன ரிஷி உயிர் விடப் போக வந்தனன் சிவபெருமான் அந்தப் பழுதை நீக்கிய அற்புதம் குறுக்கையில் நிகழ்ந்ததம்மா திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா ♪ பரமன் ஓர் புறம் பார்வதி ஓர் புறம் பிரிந்தே தவம் இருந்தார் அசுரசக்திகள் ஆதிக்கம் ஓங்க தேவர்கள் தவித்திருந்தார் கடுந்தவம் கலைத்து சக்தியை இணைக்க காமன் வில் தொடுத்தான் நடுக்கண் திறந்தான் நெருப்பை எறிந்தான் மாறன் மறைந்துவிட்டான் மாறன் மறைந்துவிட்டான் பிடிச் சாம்பல் ஆகிவிட்டான் இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா ♪ உடலில் உயிரை உயிரில் உணர்வை அமைத்தவன் ஈசனன்றோ படைத்தவனுக்கே பாடம் சொல்வது சிறுபிள்ளைத்தனம் அன்றோ உடற் கலப்பில்லா தவக்கனல் இரண்டும் மீண்டும் சங்கமமே சிவ சக்தி ஐக்கியம் குறுக்கையில் நடந்தது உயிர்ப்பிச்சை கிடைத்ததம்மா உயிர்ப்பிச்சை கிடைத்ததம்மா மன்மதன் ரதிக்கு தெரிகின்றான் இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா நொந்துப் போன ரிஷி உயிர் விடப் போக வந்தனன் சிவபெருமான் அந்தப் பழுதை நீக்கிய அற்புதம் குறுக்கையில் நிகழ்ந்ததம்மா திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின் பெருமையை அறியாமல் கங்கையை வேண்டி நீட்டிய கைகள் குறுகிப் போனதம்மா குறுகிப் போனதம்மா குறுகிப் போனதம்மா