Kishore Kumar Hits

K. Veeramani - Enrum Chiranjeeviyai lyrics

Artist: K. Veeramani

album: Ashta Veerattaanam


என்றும் சிரஞ்சீவியாய் இரு என்று சொல்லி
எமனைக் காலாலே எட்டியே தள்ளி
என்றும் சிரஞ்சீவியாய் இரு என்று சொல்லி
எமனைக் காலாலே எட்டியே தள்ளி
மார்க்கண்டனைக் காத்த மகேஸ்வரன் இங்கே
மார்க்கண்டனைக் காத்த மகேஸ்வரன் இங்கே
தூக்கிய பாதம் பார்த்திடு நெஞ்சே
தூக்கிய பாதம் பார்த்திடு நெஞ்சே
வாழ்த்தி மகிழ்ந்தே வழிபடு நெஞ்சே
வாழ்த்தி மகிழ்ந்தே வழிபடு நெஞ்சே
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்

பாற்க்கடல் கடைந்த அமுதமே லிங்கமாய்
மாறிய புதுமையை காணலாம் இங்கே
பாற்க்கடல் கடைந்த அமுதமே லிங்கமாய்
மாறிய புதுமையை காணலாம் இங்கே
பாசக்கயிறு பட்ட தழும்புடன் பரமனை
நேசத்துடன் வணங்க நினைந்திடு நெஞ்சே
நம் வேஷம் கலையும் முன்னே விரைந்திடு நெஞ்சே
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்

சக்தியை எப்போதும் உச்சிமேல் கொண்டே
நித்தமும் பௌர்ணமி நிலவாகக் கண்டான்
சக்தியை எப்போதும் உச்சிமேல் கொண்டே
நித்தமும் பௌர்ணமி நிலவாகக் கண்டான்
பித்து மொழியையும் சத்தியம் ஆக்கிய
உத்தமி உமையை போற்றிடு நெஞ்சே
சக்தி அபிராமியை சரணடை நெஞ்சே
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்
என்றும் சிரஞ்சீவியாய் இரு என்று சொல்லி
எமனைக் காலாலே எட்டியே தள்ளி
மார்க்கண்டனைக் காத்த மகேஸ்வரன் இங்கே
தூக்கிய பாதம் பார்த்திடு நெஞ்சே
வாழ்த்தி மகிழ்ந்தே வழிபடு நெஞ்சே
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்
விதிக்கும் விதி வைத்து கடந்த இடம்
இது திருக்கடவூர் என்னும் தெய்வத்தலம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists