Kishore Kumar Hits

Bharani - Yeh Asainthadum lyrics

Artist: Bharani

album: Paarvai Ondre Podhume (Original Motion Picture Soundtrack)

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... உச்சியை கோது
ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்... பொய்கையில் நீந்து
நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை நீ மெய் மறக்க
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... பொன் கைகள் வேகம்
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... வித்தைகள் காட்டு
நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே
பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா... ஆ...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists