Kishore Kumar Hits

Bharani - Adada Oorkulathil lyrics

Artist: Bharani

album: Sundhara Travels (Original Motion Picture Soundtrack)


அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை ஓரக்கண்ணால் தேட கண்டேன்
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாட கண்டேன்
மெதுவாய் மேகம்மெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்
பொதுவாய் ஈரநிலா
என்னை கண்டு நாண கண்டேன்
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை ஓரக்கண்ணால் தேட கண்டேன் ஒ ஒ ஒ

வெண்ணிலவின் அழகு முன்னழகு
அதை ஊரறியும்
பின்னழகு என்பது எப்படியோ?
அதை யாரறிவார்
முன்னழகு எப்போதும் அழகென்று
இங்கு உள்ளதென்றால்
பின்னழகும் நிச்சயம் அழகுதான்
அதை நானறிவேன்
அஞ்சு மணி ஆனா
ஒரு நோட்டம் விட வா
புதிர் ஒன்னு போட்டு
நல்ல தீர்த்தம் தரவா?
போதும் இந்த வேலை
கண்களாலே லீலை
சிணுங்காத பெண்களெல்லாம்
ஹ ஹ ஹ
அட உயிருள்ள பெண்களில்லை
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை ஓரக்கண்ணால் தேட கண்டேன் ஒ ஒ ஒ

வானத்துல ஒரே வெண்ணிலவு
அங்கு உள்ளதடி
பூமியில இரண்டு வெண்ணிலவு
இன்று வந்ததடி
சூரியனின் வெளிச்சம் பூமி தொட
முன் ஒரு நொடி
உந்தன் விழி என்னுயிர் தொட்டு விட
அட ஆகும் நொடி
பேரழகு பெண்ணே
அடி நீதான் நீதான்
புகைப்படம் எடுப்பேன்
ரெண்டு கண்ணால் உனை தான்
வெட்கம் என்னும் வார்த்தை
பெண்களுக்கு வாழ்க்கை
சொல்லாலே சொக்க வைத்தாய்
என்னை சொர்க்கத்தில் நிற்க வைத்தாய்
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை ஓரக்கண்ணால் தேட கண்டேன்
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓட கண்டேன்
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாட கண்டேன்
மெதுவாய் மேகமெல்லாம்
அங்குமிங்கும் போக கண்டேன்
பொதுவாய் ஈரநிலா
என்னை கண்டு நாண கண்டேன்
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடக்கண்டேன்
அது தான் காதலனை ஓரக்கண்ணால் தேட கண்டேன் ஒ ஒ ஒ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists