Kishore Kumar Hits

Gangai Amaran - Perai Sollavaa lyrics

Artist: Gangai Amaran

album: Kaathal Vaibhogame


பேரை சொல்லவா, அது நியாயம் ஆகுமா
பேரை சொல்லவா, அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம், என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
தங்க மாங்கனி, என் தர்ம தேவதை
தங்க மாங்கனி, என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம், என்னாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பேரை சொல்லவா, அது நியாயம் ஆகுமா

இடை ஒரு கொடி, இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி
மலரென்னும் முகம், அனைவது சுகம்
ஒன்று போதுமே, இனி உங்கள் தேன் மொழி
நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பேரை சொல்லவா, அது நியாயம் ஆகுமா

புது மழை இது, சுவை தரும் மது
வைர பூச்சரம் அது இதழில் வந்தது
இனியது இது, கனிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது
நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இதுதான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
தங்க மாங்கனி என் தர்ம தேவதை

நவமணி ரதம், நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
கவிதைகள் தரும் கலை உந்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்களம்
ஓராயிரம் தேனாறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரிதான் நடக்கடும் இளமையின் ரசனை
பேரை சொல்லவா, அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி, என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீ ராகம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists