Kishore Kumar Hits

Aadithyan - Ram Bum Bum (From "Jodi") lyrics

Artist: Aadithyan

album: Tamil Collections Songs of Simran


கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
தரரம்பம்பம் பம்பம்பம்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
தரரம்பம்பம் பம்பம்பம்பம்

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists