Mirun Pradhap - Malayahan lyrics
Artist:
Mirun Pradhap
album: Malayahan
யென்னா இங்க ஓட்ட கூர
யென்னா மழ தூத்தலோட
யென்னா நாம கஷ்டப்பட்டா யென்னா
யென்னா பண வீக்கத்துல
யென்னா நீங்க ஆத்தலுல யென்னா
நாம செத்துப்போனா யென்னா
இங்கபாரு எங்க மொழி எங்க உரிம
என்னா மச்சா எங்க slang பழம்பெரும
வேல செய்ய கெளம்புறோம் காலம்பரம
நாம குனிஞ்சி மேல தூக்குறோம் நாட்டின் முதுகெலும்ப
அய்யயையோ பிரிச்சிட்ட ஜாதி சிரும
இங்கபாரு plan பண்ணி வந்த வரும
எங்க ஊரு பொண்ணுங்க look uh கொரம
வந்து பாரு ஏ லயத்துல தங்கப்பதும
யா என்னய்யா உங்க குண்டு குழி பள்ளம் மேடு
போட்ட ஓட்டுல நெறஞ்சிச்சா
பார் சின்னையா தொர வீட்டு வாசல்
மொத்தமாவும் வேர்வையின் புற்கள் மொளச்சிச்சாம்
நீ பாடுபட்டு வேல செய்யும்
காணி பூமி ஒங்கப்பே பேருக்கு இருந்திச்சா
ஆம் மக்களே நம்புங்கள் ஓ நானும்
நல்லது செய்வேன் உங்க நீல சாயம் வெளுத்துச்சாம்
வந்தா மாசிக்காக சொன்ன எதுக்காக
தேயில மலையில நொந்தோம் பசிக்காக
சாயோ ருசிக்காக காயோ வெரல் நோக
நாட்டுக்கும் அட்டைக்கும் தானம் குடுத்தோங்க
சந்தா பணம் உனக்கு, வாழ்வாதாரம் பிணக்கு
பெட்டிசன்க Pendingula இழுக்குது வழக்கு
இன்னும் தூரம் இருக்கு, நாலாவது மொடக்கு
கெத்தா சொல்லு முகவரி Nomber one மேக்கணக்கு
யென்னா இங்க ஓட்ட கூர
யென்னா மழ தூத்தலோட
யென்னா நாம கஷ்டப்பட்டா யென்னா
யென்னா பண வீக்கத்துல
யென்னா நீங்க ஆத்தலுல யென்னா
நாம செத்துப்போனா யென்னா
இங்கபாரு எங்க மொழி எங்க உரிம
என்னா மச்சா எங்க slang பழம்பெரும
வேல செய்ய கெளம்புறோம் காலம்பரம
நாம குனிஞ்சி மேல தூக்குறோம் நாட்டின் முதுகெலும்ப
இந்த மேகம் மலையிலே பொறந்துட்டம் நாங்க
சொர்கம் அழகிலே மினுங்கிச்சி
உங்க கைக்கு அடியிலே அடிப்பணியவே
பழகிட்ட காலம் முடிஞ்சிச்சி போங்க
காகம் கரையலே பார்த்து நிக்கிறோங்க
துரோக வலையியே விழுந்துட்டோ நாங்க
கஷ்டம் But சிரிப்பிலே தரம் குறையலே
நம்மலுக்கு உடுறது நம்மடவே தாங்க
எத்தன கதைகள சுருட்டி தார
நாங்க கேக்குறோ சம்பளத்த
குறைப்ப நூற, ஓட்டையும் குடுத்துட்டோம்
கோட்டைய விட்டு சொல்றா வல்லன தட்டுமாம் வழுக்க பாறை
குத்துர குளிருல கடப்பம் ராவ
தம்பி இன்னைக்கும் பெணையனும்
ரொட்டி மாவ இந்த பச்சையில் இணைஞ்சிட்டோ
உயிர் கலந்துட்டோ இங்கத்தா பொறந்துட்டோ எங்க போவ
யென்னா இங்க ஓட்ட கூர
யென்னா மழ தூத்தலோட
யென்னா நாம கஷ்டப்பட்டா யென்னா
யென்னா பண வீக்கத்துல
யென்னா நீங்க ஆத்தலுல யென்னா
நாம செத்துப்போனா யென்னா
இங்கபாரு எங்க மொழி எங்க உரிம
என்னா மச்சா எங்க slang பழம்பெரும
வேல செய்ய கெளம்புறோம் காலம்பரம
நாம குனிஞ்சி மேல தூக்குறோம் நாட்டின் முதுகெலும்ப
Поcмотреть все песни артиста
Other albums by the artist