Kishore Kumar Hits

Mirun Pradhap - Vaa Dhagame lyrics

Artist: Mirun Pradhap

album: Vaa Dhagame


தீ போலே என்னை மாற்றுதே
என்னை தேடி வந்த ஓரு பார்வையே
காதல் தந்த ஒரு காதலே
என்னை தேடி போன ஒரு மாயமே
நீ வா
எந்தன் தேகம் நீ தானே
நீ வா
எந்தன் பாவை நீ தானே
நீ வா
உயிரில் வந்த தாகமே
நீ வா
பார்வை ஒன்று போதும் அன்பே
இரவு இனிது தனிமை புதிது
உன்னையே தேடும் மனது
நினைவு மறந்து நிலவும் தொடர்ந்து
நகருதிந்த இரவு
கால் கடுக்க காத்திருக்கேன்
காதல் கொண்டு பழகு
உயிரும் மலர்ந்து உறவும் கடந்து
உந்தன் இதயம் எனது
வாடி அழகே எந்தன் வாழ்வே
உன்னை தேடி அழைகிறேன்
கண்கள் காண இதயம் ஏங்க
பெண்மை தேடி தொலைகிறேன்
பிடித்த உன்னை மறந்த என்னை
மீண்டும் தேடி நகற்கிறேன்
காதல் கொண்ட அந்த நொடியில்
வாழ்க்கை தேடி விரைகிறேன்
உன்னை பார்த்த பின்பு தானே
காதல் வித்தை நானும் கற்றேன்
என்னை நீயும் கண்ட பின்பே
வாழ்வின் மோட்சம் நானும் பெற்றேன்
மெல்ல நகரும் கத்தி விழியால்
எந்தன் Ego நானும் விற்றேன்
கவிதை தேடும் காகிதம் நானும்
உன் சிரிப்பில் முழுமைப்பெற்றேன்
கடந்து வந்த வாழ்க்கை
ஒன்று வேண்டாமடி பெண்னே
காதல் வைத்து காத்திருந்தேன்
உன் கண்கள் காண கண்ணே
காதருகினில் கேட்க வேண்டும்
உன் கால்கொழுசுகள் பெண்ணே
காலங்கள் கடந்து நான்
மாய்ந்துவிடும் முன்னே
தீ போலே என்னை மாற்றுதே
என்னை தேடி வந்த ஓரு பார்வையே
காதல் தந்த ஒரு காதலே
என்னை தேடி போன ஒரு மாயமே
நீ வா
எந்தன் தேகம் நீ தானே
நீ வா
எந்தன் பாவை நீ தானே
நீ வா
உயிரில் வந்த தாகமே
நீ வா
பார்வை ஒன்று போதும் அன்பே உன்
பார்த்த நொடியில் காதல் சொல்ல,
இதயம் இரண்டும் மாற்றிக்கொள்ள
ஒற்றை விழியில் ஈர்த்தாய் மெல்ல,
வார்த்தை இன்றி காதல் சொல்ல
உன்னை போல் யாரும் இல்ல,
மனதால் சொன்னேன் பொய்யுமில்ல
உன்னை கையால் ஏந்தி செல்ல
வேண்டும் வாழ்வில் மோட்சம் கொள்ள
தொலைதூரம் சென்றாலும்
தொலையாதே முன்முகம்
நிழல் கூட பிரிந்த்தலும்
நிலையாக என்மனம்
கடலோரம் நான் நடந்தேன்
கரம்பிடித்து அணுதினம்
மணல்கூட ஏங்கும் தினம்
கேட்டு அடி உன் தடம்
மழை முகிலென சோகம்
நம் நினைவினில் தானோ
மனதலைகளின் ஈரம்
உன் பிரிவினில் தானோ
கலைஞ்சன் இவனின்
தாகம் உன்னை தொடர்வதும் ஏனோ
உன்னை கண்டபின் நிலை
மறந்தும் நினைப்பதும் இங்கு வீனோ
உன்னை கண்ட அந்த நாட்கள்
நினைக்க நானும் மறுக்கிறேன்
காதல் தந்த வழியில் நாளும்
இங்கே மெல்ல துடிக்கிறேன்
சாபம் என்று ஆனேன் உன்னால்
என்னை நானும் வெறுக்கிறேன்
பிரிவு தந்த கதையில்
இங்கே பித்தனாகி அழைகிறேன்
தீ போலே என்னை மாற்றுதே
என்னை தேடி வந்த ஓரு பார்வையே
காதல் தந்த ஒரு காதலே
என்னை தேடி போன ஒரு மாயமே
நீ வா
எந்தன் தேகம் நீ தானே
நீ வா
எந்தன் பாவை நீ தானே
நீ வா
உயிரில் வந்த தாகமே
நீ வா
பார்வை ஒன்று போதும் அன்பே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists