நாம் நடந்த தெருவில் கால்நோற்றாண்டுக்கு பிறகு தன் காதலி நடந்த தெருவில் நடந்து பார்க்கிறான் காதல் முறிந்து போன ஒரு காதலன் அது தூக்கமா சந்தோசமா ரெண்டுமா நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான் இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான் இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான் இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான் காதல் நடந்த வீதியிலே நடந்து பார்த்தல் கொடுமையே தேகம் தேடி ஆடை ஒன்று நடந்து போதல் நரகமே ஒருசொல்லும் பேசாமலே ஊமைக் காதல் முடிந்ததடி நம் இதயங்களின் உரையாடலைத்தான் இந்தத் தெருவே பேசுதடி நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள் நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள் திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள் உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள் வீதியிருந்தும் வெறுமையாய் நாதியிருந்தும் தனிமையாய் இலக்கணத்தில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் ஒருமையாய் ஒருசொல்லும் பேசாமலே ஊமைக் காதல் முடிந்ததடி நம் இதயங்களின் உரையாடலைத்தான் இந்தத் தெருவே பேசுதடி நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும் கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி நாம் நடந்த தெருவில் நான் மட்டும் நிழல் விழுந்த தெருவில் ம்ம்ம் ம்ம் ம்ம்