Kishore Kumar Hits

Shakthisree Gopalan - Azhagaana Aadavaa (From "Echo") lyrics

Artist: Shakthisree Gopalan

album: Azhagaana Aadavaa (From "Echo")


அழகான ஆடவா
இதமாக தாக்கவா
ஏக்கம் தீர்க்கவா
கலவரங்கள் செய்திடவா
சிரிப்பாலே சீண்டவா
நெருப்பாக தீண்டவா
எல்லை தாண்டவா
அதிசயங்கள் காட்டிடவா
வானமென நீளும் நாணம் அணிந்திருந்தேன்
ஆடையை முழுவதுமாய் உனக்கே குடுத்து விட்டேன்
விரைகிறாய் கரைகிறேன் விடாதெனை அடைகிறாய்
காதல் போதையை பொழிகிறாய் நனைகிறேன்
தடாலென அணைக்கிறாய் சாய்கிறேன்
அழகான ஆடவா
இதமாக தாக்கவா
ஏக்கம் தீர்க்கவா
கலவரங்கள் செய்திடவா

இருவரும் வலயம் போலானோம்
மையலின் நிலையம் என்றானோம்
முடிவென ஏதும் தெரியாமல்
ஒருவரை ஒருவர் தொடர்கின்றோம்
யாவும் இங்கு சுகமடா
உடல் அன்பிலே பேசிடும் போதே
இந்த நொடி வரமடா
அதை கூறிட வார்த்தைகள் ஏது
தொடுகிறாய் தொலைகிறேன்
திடீரென சுடுகிறாய் மீண்டும் மீண்டும்
வருகிறாய் தருகிறேன் கறாரென பெருகிறாய் நிறைகிறேன்
அழகான ஆடவா
இதமாக தாக்கவா
ஏக்கம் தீர்க்கவா
கலவரங்கள் செய்திடவா
வானமென நீளும் நாணம் அணிந்திருந்தேன்
ஆடையை முழுவதுமாய் உனக்கே குடுத்து விட்டேன்
விரைகிறாய் கரைகிறேன் விடாதெனை அடைகிறாய்
காதல் போதையை பொழிகிறாய் நனைகிறேன்
தடாலென அணைக்கிறாய் சாய்கிறேன்
தொடுகிறாய் தொலைகிறேன்
திடீரென சுடுகிறாய் மீண்டும் மீண்டும்
வருகிறாய் தருகிறேன் கறாரென பெருகிறாய் நிறைகிறேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists