Kishore Kumar Hits

Aruna Sairam - Vishamakkarakannan lyrics

Artist: Aruna Sairam

album: Unnai Allal


விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
விதம் விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
விதம் விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
நீலமேகம் போலே இருப்பான்
நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கோலப் புல்லாங் குழலூதி
கோபிகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பக்கத்து வீட்டுப்
பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி
வம்புக் கிழுப்பான்
எனக்கது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
எனக்கது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு
அவள் விக்கி விக்கி அழும்போது
இதான்டி முகாரி ராகம் என்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
வெண்ணை பானை மூடக்கூடாது
வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது
சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லி விட்டால்
இவனை திருடன் என்று சொல்லி விட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்
சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லி விட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
விதம் விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்
விஷமக்காரக் கண்ணன்
விஷமக்காரக் கண்ணன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists