Kishore Kumar Hits

Rajkumari - Mathalam Kottudhadi lyrics

Artist: Rajkumari

album: Sindhoo Nadi Poo


பொண்டுகளா பொண்டுகளா
பொத்திகிட்டு கெடங்க
பசுபதி ஓடி வர்றான்
பத்திரமா இருங்க
பொம்பளைங்க நா இவனுக்கு புத்திக்குள்ள கிறுக்கு
கைய கால தொட்டு வைப்பான் காலம் கெட்டுகெடக்கு
உஷாரு உஷாரு உஷாரு

மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

சின்ன மாங்கா அது திறந்திருக்கு
திருடி தின்ன அதில் ருசி இருக்கு
ஆமா ஆமா ஆமாமா
அட ஆமா ஆமா ஆமாமா
பட்டு பூச்சி பல ரகம் இருக்கு
புடிச்சுப்புட்டா தனி சுகமிருக்கு
ஆமா ஆமா ஆமாமா
அட ஆமா ஆமா ஆமாமா
கம்மாயோ நெறஞ்சிருக்கு
காக்கா நீச்சல் அடிப்போமா
எருமையெல்லாம் படகாக
எதிர் கரைக்கு போவோமா
கிழக்க போற ரயிலேறி
கீழக் கரையில் குதிப்போமா
கெழடு கட்ட செவப்புக் கொடி
காட்ட வந்த ஒதைப்போமா
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

பூவரச இலை பீபீ செஞ்சு
புது ராகம் ஒண்ணு படிக்கட்டுமா
பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ
அய்யனாரு வெள்ளக் குதிரையிலே
ஐயாவும் கொஞ்சம் ஏறட்டுமா
குதிர வால புடிச்சிக்கிட்டு
உன் கூட நானும் வரலாமா
வெள்ளாட்டு பால் பீச்சி
கண்ணுக்குள்ள விடலாமா
புதுப்பட்டி ரோட்டோரம்
புளியங்கா அடிப்போமா
இந்த வயசு மாறாம
இருக்கும் வரைக்கும் இருப்போமா
பொட்டு தவிடு பருத்தி கொட்ட
சிட்டா வானில் பறப்போமா
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists