ஆ அ-அ-ஆ-அ அ-அ-அ அ-அ-ஆ-ஆ ♪ அ-அ-ஆ-அ-அ அ-அ-ஆ-அ-அ-ஆ-அ ஆ-அ-அ கண்ணனை தேடி வந்த ராதையும் நானே காணாமல் நீண்ட காலம் வாடுகின்றேன் கண்விழி பூத்து நிற்கும் கோதையும் நானே ஸ்ரீ வாசுதேவனை நான் சேர்வதென்று யாரோடு என்ன சொல்வேன் ஆ-அ-ஆ-அ ஆ-அ-ஆ-அ-ஆ-அ-ஆ யாரோடு என்ன சொல்வேன் நான் கொண்ட வேதனை என் போன்ற கோபிகைக்கு ஏன் இந்த சோதனை நான் கண்கள் மூடியே நாளானதே கண்ணனை தேடி வந்த ராதையும் நானே காணாமல் நீண்ட காலம் வாடுகின்றேன் ♪ கண்ணா நீ வா வா, என் தேவா உனை நான் அழைத்தேன் காய்க்காத பூவா ஒரு தீவா நீ சொல் மன்னவா ஓ நந்தலாலா கோபாலா உடல் நான் மெலிந்தேன் ஓயாமல் வாட்டும் அனல் மூட்டும் காதல் அல்லவா ஆகாய மேகங்கள் எல்லாம் தூதாக நான் விடுத்தேன் அன்றாடம் முட்களின் மீது தூங்காமல் நான் படுத்தேன் நோய் தீர்க்க வேண்டுமே நாராயணா கண்ணனை தேடி வந்த ராதையும் நானே அ-அ-ஆ-ஆ-அ அ-ஆ அ-அ-அ-அ ♪ ஆ-அ-அ ♪ உன் தோற்றம் யாது பாராது எனை நான் கொடுத்தேன் உன்னோடு வாழ நலம் சூழ நாளும் ஏங்கினேன் பொன் அந்தி வேளை பூமாலை புதிதாய் தொடுத்தேன் உன் காதில் மெல்ல இதை சொல்ல நானும் ஏங்கினேன் பாஞ்சாலி வாடிய போது பூச்சேலை தந்தவனே ஓர் நாளில் விஜயனுக்காக தேரோட்ட வந்தவனே நான் கூவும் வேளையில் வாராததேன் கண்ணனை தேடி வந்த ராதையும் நானே காணாமல் நீண்ட காலம் வாடுகின்றேன் கண்ணனை தேடி வந்த ராதையும் நானே