தீர தீர என்னை கொல்லாதே உள்ளே சிரிக்காதே கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே உள்ளே நடிக்காதே கைகள் போடும் நத்தை கோலம் காதல் பேசும் வார்த்தை ஆகும் கால்கள் போடும் தத்தை தாளம் உன்னை தேடி தாவுதே ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில் இனி நான் சிறையில் எனை கைது செய்து போகும் கண்கள் ஓர் மழையில் கரைந்தேன் துளியில் இழுத்தாய் நதியில் முதல் காதல் சொல்லு வாட்டாதே குறுந்தகவல் திரையில் கவிதைகளாக குறு குறு புன்னகையை தூவுதே தொடுதிரையில் தவழும் பெருவிரலாக கருவிழி உன் அழகை தீண்டுதே ஏதேதோ தேடும் உள்ளம் எதுவரை மௌனம் வளர்பாயோ ஏராளம் பேசாமல் நீ ஒரு முறை உன் காதலை சொல்லிவிடு யாரோடும் நெஞ்சம் நெருங்கியதே இல்லை உன் பின்னால் வந்தின்று மயங்குதே நீதான் எல்லை மின்னலின் ஓசை மின்மினி ஆசை மின் தடையாலே ஓயுமா உன் விழி போடும் அட்சரம் எல்லாம் இன்னிசை போலே பாயுமா விடா மழையில் நனைந்தே நடப்போமா இதயம் சரிந்து இரு கைகள் சேர காதல் கூடும் ஓர் நொடியில் நுழைந்தாய் உயிரில் இனி நான் சிறையில் எனை கைது செய்து போகும் கண்கள் ஓர் மழையில் கரைந்தேன் துளியில் இழுத்தாய் நதியில் முதல் காதல் சொல்லு வாட்டாதே