Kishore Kumar Hits

Ajesh - Karichaan Kuyile - From "Sarbath" lyrics

Artist: Ajesh

album: Karichaan Kuyile (From "Sarbath")


கரிச்சான் குயிலே சிரிச்ச மயிலே
கவுந்தேன் ஆள மடக்கி
ஓடி அவ மாயமாகுறாளே
வெறிச்ச வெயிலே அடிச்ச புயலே
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து
அவ தாளம் போடுறாளே
அசலா அவ எனக்காக
கெடச்சாலே கணக்காக
ஒறக்கம் கலைக்கும் சுகத்த அவ தானமாக கொடுத்தா
நழுவாத நங்கூரம்
நடு நெஞ்சில் வெதச்சாளே
தனியா முழுசா அவதான் அரசாளுறா
அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே
அடியே...

Hey கட்டாத காளை போல
நான் கம்பீரமாதான் போக
என் கண்ணால மோதி என்னை நீ சாய்கிற
Hey சொல்லாத ஆசை தூங்க
நான் செல்லாத காசா ஏங்க
தினம் உன்னோட ஓசை கேட்டு கேட்டு முழிக்கிறேன்
பாலம் போட்டு நானும்தான் பரிமாற பாக்குறேன்
வெடி போட்டு ஒடச்சாயே
காலை மாலை தோனல கனநேரம் தூங்கல
கலைச்சாயே கனவே
திரை போட்டு நீயும் தேட தேட ஓடி ஒளியிரியே
இரவாக நானும் ஓஞ்சு போக வெளிச்சம் கொடுக்குறியே
கடிகார முள்ள போல என்னை வாட்டி சொழட்டுறியே
கடிவாளம் மாட்டி பாதை காட்டி
என்னை என்னை என்னை அழைக்கிற
அடி பார்வையாள ஈட்டியாக பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி நீயும் ஆள மயக்குறியே
அடி காரமாக கூரு போட்டு காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆற போடும் மருந்தா இனிக்குறியே
அடியே...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists