மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும் மகரந்த சேர்க்கை காதல்தானா இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை வழிவது காதல் தீர்த்தம் தானா வார்த்தைகள் தோற்க்குதே தீண்டலே தரும் மொழி நீயா தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை நீயா ♪ எழுதிடவா இதழ் வரியா இடைவெளிதான் பெண் உயிர் வலியா ♪ நீர் கேட்டேன் மழையாக வான் கேட்டேன் நிலவாக நீ எந்தன் கனவாக தேடி வந்ததென்ன நான் கேட்ட வரமாக நீ வந்தாய் நிஜமாக நாம் என்றும் உறவாக காலம் சேர்த்ததென்ன ஒரு வானம் உடைந்து இரு வானம் வருமா ஒளி தூங்கும் இரவில் பூக்கள் பூப்பதென்ன மழை யாவும் வடிந்தும் மரதூறல் வருமே ஒரு யாமம் முடிந்தும் ஊடல் தோற்பதென்ன நதி நீயா துளி நானா கலந்திங்கே காதல் ஆகுதே எழுதிடவா இதழ் வரியா இடைவெளிதான் பெண் உயிர் வலியா