Kishore Kumar Hits

Nivas K Prasanna - Nenjorama lyrics

Artist: Nivas K Prasanna

album: Madhil Mel Kaadhal


நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற
உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம்
ஓடுதே நிற்காமல் வேகமா
உன் கண்களால் இன்னும் நெருங்கி பழக சொல்லி
ஏங்குதே என் நெஞ்சம் அதிகமாய்
ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்
நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
மின்சாரமா என்ன தாக்கி போகுற
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
மென் சாரலா என்ன தொட்டு போகுற
என்ன தொட்டு போகுற
என்ன தொட்டு போகுற

யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில்
வெட்கம் காட்டுறா
ஜாடைய வீசியே நானும் பேசயில்
கோபம் காட்டுறா
என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா
கூடவே என்னையும் கூட்டி போகுறா
கூர்மையா பார்த்து தான் கூறு போடுற
உன் பார்வையால் என்ன கட்டி போடுற
உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற
தொடாமலே நீ தீய மூட்டுற
விடாமலே என்ன நீயும் தேடுற
இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக
ஆவலா என் கால்கள் ஏங்குதே
என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம்
துள்ளலா என் கண்கள் திரும்புதே
கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists