Kishore Kumar Hits

Uma Ramanan - Nee Pathi Naan Pathi - Radio Edit lyrics

Artist: Uma Ramanan

album: Nee Pathi Naan Pathi (Radio Edit)


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே
இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தம் இருக்கும் உன்னாலே
மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை
ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கிவிடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா
இந்த மனம் தான் என் மன்னவனும்
வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுமை நீதான்
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே
இனி நான் இல்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists