எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே வாரும் நாங்கள் கூடும் நேரத்தில் - 2 1.மந்தை சேரா ஆடுகள் போல சிதறி நாங்கள் திரிவது ஏனோ - 2 ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே தாகம் தீர்க்க வாருமையா - 2 - எங்கள் தகப்பனே 2.கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம் கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே - 2 ஆற்றலின் உறவே அபிஷகமே ஆற்றிட வாருமையா - 2 - எங்கள் தகப்பனே 3.உன்னதமான உயர்வின் உறவே சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே - 2 பலத்த துருவம் நங்கூரமே ஆபத்தில் என் கேடகமே - 2 - எங்கள் தகப்பனே